34 ஆண்டுகள் ICICI-யில் இருந்தவருக்கு HDFC-யின் கடிவாளம்: கலாச்சார மாற்றத்தை வங்கி தாங்குமா?

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் (HDFC Bank) புதிய மேனேஜிங் டைரக்டர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக (MD & CEO) அனுப் பாக்சி நியமிக்கப்பட இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.தற்போதைய CEO சஷிதர் ஜெகதீசனின் பதவிக்காலம் அக்டோபர் 26-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து, அக்டோபர் 27 முதல் மூன்று ஆண்டுகளுக்கு அனுப் பாக்சி புதிய தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார். ஐசிஐசிஐ (ICICI) குழுமத்தில் 34 ஆண்டுகள் பணியாற்றி வங்கி மற்றும் நிதிச் சந்தைகளில் ஆழமான அனுபவம் கொண்ட இவரது வருகை, நீண்ட நாட்களாக நிலவி வந்த தலைமை மாற்றம் குறித்த நிச்சயமற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *