ஆகஸ்ட் 3, 2026 முதல் அமலுக்கு வரும் மாற்றம்1. NSE Cash Market (சாதாரண பங்கு சந்தை):நேரத்தில் மாற்றம் இல்லை. காலை 9:15 மணி முதல் மாலை 3:30 மணி வரை தான்.ஆனால் புதிதாக Closing Auction Session (CAS) என்ற ஒரு முறை வருகிறது. இது மாலை 3:15 முதல் 3:35 வரை நடக்கும். இதன் மூலம் தான் பங்குகளின் இறுதி விலை இன்னும் வெளிப்படையாக நிர்ணயிக்கப்படும்.2. NSE F&O Market (Futures & Options):இதில் தான் முக்கிய மாற்றம். முன்பு மாலை 3:30 மணிக்கு முடியும். இனி மாலை 3:40 மணி வரை 10 நிமிடம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது.இது Index மற்றும் Stock இரண்டு வகை Derivatives-க்கும் பொருந்தும்.ஏன் இந்த மாற்றம்?Cash market-ல் நடக்கும் Closing Auction-ன் இறுதி விலையை வைத்து F&O traders தங்கள் positions-ஐ hedge செய்யவும், சரி செய்யவும் நேரம் கொடுப்பதற்காகத் தான்.3. BSE நிலை என்ன?BSE இன்னும் தனது நேரத்தை மாற்றவில்லை. BSE-யில் வழக்கம் போல் காலை 9:15 முதல் மாலை 3:30 வரை தான்.மற்ற நேரங்கள் மாற்றம் இல்லை:• Pre-open Session: காலை 9:00 – 9:08 • Trade Modification முடியும் நேரம்: மாலை 4:15 சுருக்கமாக: நீங்கள் Cash market-ல் trade செய்தால் 3:30 வரை தான். நீங்கள் F&O trade செய்பவராக இருந்தால், ஆகஸ்ட் 3 முதல் 3:40 வரை உங்களுக்கு கூடுதலாக 10 நிமிடம் கிடைக்கும்.
NSE F&O Timing 3:40 PM வரை நீட்டிப்பு – Traders தெரிந்து கொள்ள வேண்டியது…